சின்னமனூர் அருகே குச்சனூர் இணைப்பு சாலையில் பெரும் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சாலையில் மேல பூலானந்தபுரத்தில் முல்லைப் பெரியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே சீலையம்பட்டியில் மெகா தடுப்பணை உள்ளது. 1998ம் ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் இருந்த கல்பாலம் காணாமல் போய்விட்டது குச்சனூரை இணைக்கும் பாலம் இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் சின்னமனூரை சுற்றி வர சிரமப்பட்டனர்.

இந்நிலையில் சீலையம்பட்டி, குச்சனூரை இணைக்கும் விதமாக ரூ. 6 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தற்போது பாலத்திலிருந்து குச்சனூருக்குள் செல்லும் தார்சாலையில் பல இடங்களில் மழை நீரால் பழுது ஏற்பட்டு பள்ளங்களாக இருக்கிறது இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பள்ளங்களை சீரமைத்து விபத்து நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: