பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் மூலம் 5 ஸ்மார்ட் டிவி மற்றும் பள்ளிக்கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்து கொடுக்கப்பட்டது. கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம், தலைமையாசிரியர் புவியரசு ஆகியோர் பள்ளி மேலாண்மைக்குழு பற்றியும் பள்ளிக்கு உதவி செய்தவர்களை பாராட்டியும் பேசினர்.