வெயிலை சமாளிக்க தயார்நிலை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வருகிறது. வட மாநிலங்களின் பல இடங்களில் 116 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அடிக்கிறது. அடுத்த வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கோடை கால நோய்களும் தாக்க தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘மே மாதம் வரையில் 116 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருப்பதால், வெயில் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை தயார்நிலையில் வைக்க  வேண்டும். வெயில் சம்பந்தப்பட்ட நோய்கள் தொடர்பான, தேசிய நடவடிக்கை வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: