கோயம்பேடு மார்க்கெட்டில் கடை முன் குப்பை கழிவுகள் கொட்டினால் ரூ.500 அபராதம்:சிஎம்டிஏ நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் முன் குப்பை கழிவுகள் கொட்டும், கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சிஎம்டிஏ எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 10 டன் காய்கறிகள், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வருகின்றன. இங்குள்ள கடைகளில் சேரிக்கப்படும் குப்பை கழிவுகளை சிஎம்டிஏ நிர்வாக சார்பில், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கடைகளில் முன் காய்கறிகள், பழங்களின் கழிவுகள் கொட்டப்படுவதால் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருகின்றவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பல்வேறு நோய்கள் தாக்கும் ஆபத்தும் உள்ளது. இதனால் கடைகள் முன் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும், சிஎம்டிஏ  நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிஎம்டிஏ நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு காய்கறி மற்றும் பழம் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் ஆய்வு செய்தனர். அப்போது கடைக்கு முன் காய்கறி கழிவுகளை கொட்டக்கூடாது. கடைமுன் குப்பை கழிவுகள் கிடந்தால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.’’ என்றனர்.

Related Stories: