சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை'என்று அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது பெருமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதல்வர் பேசி வருகிறார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறையின் 75வது ஆண்டு பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தொடர்புடையது சாலைகள். சாலை சரியில்லை என்றால் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான்.

அரசிற்கு நற்பெயரையும், அவப்பெயரையும் பெற்று தரவேண்டும் என சொன்னால் அதற்கு நெடுஞ்சாலைத்துறை தான் காரணமாக அமையும்” என்று கூறினார். தமிழ்நாடு கட்டமைப்பில் வளர்ச்சி பெற மிக முக்கிய பங்கு வகிப்பது நெடுஞ்சாலைத்துறை தான் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2026 க்குள் தரைப்பாலங்களை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க இருக்கிறோம்.  முதற்கட்டமாக 648 தரைபாலங்கள் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: