வேளச்சேரி பேபி நகரில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்பாது வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘வேளச்சேரி பேபி நகர் பகுதியில் முதியவர்கள் நலன்கருதி இ-சேவை மையம் அமைக்க வேண்டும்,’’ என்றார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ‘‘வேளச்சேரி பேபி நகர் பகுதியில்  ஒரு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

 இச்சேவை மையம் வாயிலாக 1.4.2020 முதல் 23.8.2021 வரை மொத்தம் 724 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அங்கு புதிய இசேவை மையம் துவங்க வேண்டிய அவசியம் இல்லை,’’ என்றார். தொடர்ந்து அசன் மவுலானா பேசுகையில், ‘‘அமைச்சர் சொல்லும் இடம் வடக்கு பகுதியில் உள்ளது. நான் சொல்லும் இடம் தெற்கு பகுதியில் உள்ளது. இப்பகுதியில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்,’’ என்றார். இதற்கு அமைச்சர் தங்கராஜ், ‘‘அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: