கந்தர்வகோட்டை பகுதியில் சோளம் பயிரிட நிலம் உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதி முழுவதும் படுவேகமாக விவசாய பணி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக சோளம் பயிர் செய்ய விவசாயிகள் நிலங்களை நன்கு கோடை உழவு செய்து அத்துடன் இயற்கை உரங்களை நிலங்களில் தூவி சோளம் பயிர் செய்ய பாத்தி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளை சந்தித்து பேசிய வகையில் விவசாயத்தைப் பொறுத்தவரை சந்தைகளில் விற்பனைக்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டும்.

அத்துடன் நீர்நிலை, பூச்சித்தாக்குதல் அறிந்துகொண்டு பயிர் செய்தால் நல்ல மகசூல் பெறலாம் என்று தெரிவித்தார்கள். தற்சமயம் கோழிப்பண்ணைகளில் சோளங்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்துகொள்வதால் விற்பனை செய்ய சிரமம் இல்லாமல் உள்ளது. நகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பச்சை சோள கதிர்களை வாங்கி செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories: