தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத அடையாள உடைகளை தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகள் மத அடையாள உடைகளை தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவ- மாணவிகள் மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில் பள்ளி மாணவர்கள் இடையே வேறுபாட்டை களையும் வகையில் 1960-ம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடை அறிமுகம்ப்படுத்தப்பட்டது. இது தொடர்பான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றவில்லை. மேலும் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களை கொண்ட ஆடைகளை மாணவர்கள் அணிந்து வருவது விதிகளுக்கு எதிரானது எனவும் அவர் மனுவில் தெரிவித்து இருந்தார்.  

அதனையடுத்து மாணவர்களிடம் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவயின்மையை ஏற்படுத்துவதை தடுக்கவும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப் போன்ற பிரச்னை தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும், மத அடையாள உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி அமர்வுக்கு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்களுக்கு ஆடை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் எப்படி இதனை விசாரணைக்கு ஏற்க முடிவும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: