தூத்துக்குடி மாணவி சோபியாவுக்கு எதிரான வழக்கில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுவிப்பு...: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாணவி சோபியாவுக்கு எதிரான வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். சில  ஆண்டுகளுக்கு முன் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் சென்றார். அந்த விமானத்தில், தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவும் பயணித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் மாணவி சோபியா, பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோஷமிட்ட சோபியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

விசாரணைக்குப் பிறகு சோபியாவை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில் தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை வழக்கில் இருந்து விடுவித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. மேலும் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி இளங்கோவன் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: