வெயில் கொடுமையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க: குமரி கோயில்களில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

நாகர்கோவில்: கோடைகாலம் என்பதால் பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது குமரி மாவட்டத்திலும் காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது பகல் வேளைகளில் சாலையில் நடமாட முடியாத நிலை உள்ளது வெயில் காரணமாக காலை வேளையில் கோயில்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் பிரகாரத்தை வலம் வருவதில் பெரும் சிரமம் உள்ளது இதை கருத்தில் கொண்டு முக்கிய கோயில்களில் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி தரிசனம் செய்யும் வகையில் பிரகாரத்தை சுற்றி டேம் புரூப் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. வெள்ளை கலர் கொண்ட இந்த டேம் புரூப் பெயிண்ட் வீட்டின் மொட்டை மாடிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். இது வெயிலின் தாக்கத்தை உள்வாங்க கூடிய தன்மை கொண்டதாகும். டேம் புரூப் பெயிண்ட் பூசப்பட்ட பகுதியில் பக்தர்கள் நடமாடினால் அவர்களின் பாதங்கள் சூடேறாது அறநிலையத்துறை கோயில்களில் இந்த வசதியை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயில் நாகராஜா கோயில் குமாரகோவில் முருகன் கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் பாதங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துகொள்ளும் வகையில் டேம் புரூப் பெயிண்ட் தரையில் அடிக்கும் பணி நடந்து வருகிறது. நாகராஜாகோயிலில் உள், வெளி பிரகாரங்களில் இந்த டேம் புரூப் பெயிண்ட் தரையில் பூசப்பட்டுள்ளது. பெயிண்ட் பூசப்பட்ட பகுதி வழியாக பக்தர்கள் நடமாடும் போது அவர்களின் பாதங்கள் சூடாகாது. இதன் மூலம் அவர்கள் மன திருப்தியுடன் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்ய முடியும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் அனைத்து கோயில்களிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: