ஸ்கூபா டைவிங் செய்த ராய் லட்சுமி

சென்னை: நடிகை ராய் லட்சுமி மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் செய்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால், லட்சுமி ராய் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றி வைத்துக்கொண்டார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை. அவ்வப்போது ஒரு சில படங்களில் நடிக்கிறார். ஆனால் அந்த படங்களும் சரியாக ஓடாததால் தற்போது விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்கு சென்று, கவர்ச்சியாக மட்டுமே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வந்தவர், திடீரென ஸ்கூபா டைவிங் கற்றுக்கொள்ள விரும்பினார். இதற்காக தனது மாலத்தீவு பயணத்தை நீட்டித்து மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தார். அதன்படி சில நாட்களிலே ஸ்கூபா டைவிங் கற்றுக்கொண்டு, டைவிங்கும் செய்த வீடியோக்கள், புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ராய் லட்சுமி வெளியிட்டுள்ளார். ‘வேறொரு புதிய உலகத்திற்குள் வந்திருக்கிறேன். இங்கு சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறேன்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: