இந்த வருடம் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதியோர் ஓய்வூதியம் நிறைய கொடுத்துள்ளோம். இந்த வருடம் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 149 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுத்துள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் என்ன மரியாதை வேண்டுமோ அதை கொடுக்கக்கூடிய சூழ்நிலையை நிச்சயம் உருவாக்கி தருவோம். முதியோர் ஓய்வூதியம் தருவதில் வரையறை இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். யாருடைய வீட்டையும், குடிசையையும் காலி செய்ய சொல்லும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால், நீதிமன்றம் காலி செய்ய வேண்டும் என கூறுகிறது. வேறுவழியில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

Related Stories: