மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி பண மோசடி!: திண்டுக்கல்லில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் ரூ.757.77 கோடி சொத்து, 36 வங்கி கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை..!!

திண்டுக்கல்: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது. ஆம்வே நிறுவனம் தனது நிறுவன பெயரில் விற்பனை செய்யும் பொருள்களின் விலைகள், அதே வகையில் சந்தையில் விற்பனை இருக்கும் பொருட்களின் விலைகளோடு ஒப்பிட்டால், மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எம்.என்.எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

இதனை அடுத்து திண்டுக்கல்லில் ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை கட்டடம், நிலம், வங்கி கணக்கு, டெபாசிட்டுகள் உள்ளிட்டவையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, ரூ.41.183 கோடி மதிப்புள்ள ஆம்வே நிறுவனத்தின் அசையும், அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டன. 36 வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருக்கும் ரூ.345.94 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத்துறை முடக்கியது. ஆம்வே ஆலையில் உள்ள தயாரிப்பு கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களும் முடக்கப்பட்டது.

ஒருவர் இந்த நிறுவனத்தில் இணைந்து பொருள்களை வாங்கி பயன்படுத்துவதோடு, தங்களுக்குத் தெரிந்தவர்களையும் இதில் சேர்த்துவிடுவதால் கூடுதலாக சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தி, ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பொருட்களை மக்களின் தலையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக ஆம்வே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: