ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் இன்று அப்பல்லோ, எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை: நாளையும் விசாரணை தொடர்கிறது

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் இன்றும் நாளையும் அப்பல்லோ,எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது, ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் இதுதொடர்பாக அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், சசிகலா  மற்றும் சசிகலாவின் உறவினர், அதிகாரிகள் என பலரிடம் விசாரணை என சுமார் 150 க்கும் மேற்பட்டோரிடம்  விசாரணை  நடத்தி முடிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்யிடம்  விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது எனவும்  90 சதவீத விசாரணை முடிந்துள்ளது.என ஆணையம் அறிவித்தது. மேலும், ஆணையம் சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டும் என ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி , மறு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவர்கள் 11 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில், மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகியோர்  ஆஜராகினர். அவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என அப்போலோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் மறு விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் ,இது குறித்து விரைவில் விசாரணை அறிக்கை அரசிடம் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: