இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கிய திரை பண்பாடு ஆய்வகத்தில் இலவச பயிற்சி

சென்னை: இயக்குனரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன், நாம் அறக்கட்டளை சார்பில் திரை மற்றும் பண்பாடு ஆய்வகம் தொடங்கியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, பிறகு குடும்பத்தினர் சம்மதத்துடன் அவர்களுக்கு கல்வி, உணவு, தங்கும் இடம் போன்ற வசதிகளை கட்டணம் இல்லாமல் செய்து கொடுத்து, ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக அவர்களை உருவாக்குவது வெற்றிமாறனின் நோக்கமாகும்.

இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வெற்றிமாறன் தாயார் மேகலா சித்ரவேலிடம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். அதோடு, இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளில் இருந்து வெற்றிமாறன் பரிந்துரை செய்பவருக்கு, தனது வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். நாம் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன், வெற்றி துரைசாமி மற்றும் பாடத்திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் உடனிருந்தனர்.

Related Stories: