புச்சா நகரில் 350 உடல்கள் மீட்ட நிலையில் கீவ் நகரில் 1,000 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு: 3,000 உக்ரைன் வீரர்கள் பலியானதாக அதிபர் தகவல்.!

கீவ்: புச்சா நகரில் 350 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், கீவ் நகரில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே 3,000 உக்ரைன் வீரர்கள் இதுவரை பலியானதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன்  தலைநகர் கீவ்வில் முகாமிட்டிருந்த ரஷ்யப் படைகள் திரும்பிய நிலையில்,  அங்கு 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இவர்களில் பெரும்பாலான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தூக்கிலிடப்பட்டதாகவும் உள்ளூர் காவல்துறையை  மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. புச்சா நகரில் 350க்கும்  மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவ் நகரில் 1,000க்கும்  மேற்பட்ட உடல்கள் கண்ெடடுக்கப்பட்டதால் உக்ரைன் அதிகாரிகள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே ரஷ்யாவின் மோஸ்க்வா என்ற கப்பலை இரண்டு  உக்ரேனிய ஏவுகணைகள் தாக்கியதால் அந்த கப்பல் மூழ்கியது. நெப்டியூன்  ஏவுகணைகளால் தாக்கப்பட்ட மோஸ்க்வா கப்பல், செவஸ்டோபோல் துறைமுகத்திற்கு  அருகே மூழ்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய போர்க்கப்பலை  ரஷ்யா இழந்தது. இந்த கப்பலில் அணுஆயுதங்கள் இருந்ததாகவும், 400 மாலுமிகள்  இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அணு ஆயுதங்களுடன் 400 மாலுமிகளும்  கடலில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மூலம் இதுவரை சுமார் 3,000 வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், 10,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். அதேநேரம் ரஷ்யப் படையின் ஹெலிகாப்டர்கள், உக்ரைன் நாட்டின் ராணுவ உபகரணங்களையும் அழித்ததாக ரஷ்ய காவலர்களின் செய்தி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யப் படையின் விமானக் குழு உக்ரைன் ராணுவ பிரிவுகளை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதன் விளைவாக, எதிரியின் ஆயுதக் குழுவும், மூன்று ராணுவ உபகரணங்களும் அழிக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: