நடிகர் ஷாருக்கான் மகன் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்: விஜிலென்ஸ் குழுவின் விசாரணையில் திடுக்

மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஜிலென்ஸ் குழுவின் விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற பயணக் கப்பலை போதைப்பொருள் தடுப்பு  பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு அக்டோபர் 2ல் சோதனை செய்தனர். அப்போது போதைப்  பொருள் பயன்படுத்திய புகாரில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்  உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது  இவ்வழக்கு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆர்யன்கான் உட்பட 18  பேர் ஜாமீனில் உள்ளனர்.

வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் தற்போது சிறையில்  உள்ளனர். இந்நிலையில் ஆர்யன் கானுக்கு அனுப்பப்பட்ட ‘குரூஸ்’ என்ற போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் இரண்டு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போதைப் ெபாருள் கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘ஆர்யன்கான் ெதாடர்பான வழக்கை விசாரித்த அதிகாரிகளில் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக எஸ்பி வி.வி.சிங் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன் பிரசாத் ஆகியோரிடம், போதைப் ெபாருள் கட்டுப்பாட்டு அமைப்பின் விஜிலென்ஸ் குழு விசாரணை நடத்தியது. அவர்கள் நடத்திய விசாரணையில் மேற்கண்ட இரு அதிகாரிகளும் ஆர்யன்கானுக்கு போதைப் ெபாருள் சப்ளை ெசய்தவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து இரண்டு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்’ என்று கூறினர். ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கை போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: