சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை 1 மற்றும் 2-வது போக்சோ வழக்குகளில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபாவை வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

சிவசங்கர் பாபா மீது பல புகார்கள் வந்ததால், இதுவரை மொத்தம் 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்குகளில் இருந்து ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளது.

அதனால் சிவசங்கர் பாபா தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஆனால் தற்போது வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, முதல் மற்றும் 2-வது போக்சோ வழக்குகளில் இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: