ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்: பாமக எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சேலம் மேற்கு அருள் (பாமக) பேசியதாவது: அரசு பள்ளிகளில் காலி பணியிடம் அதிகமாக இருக்கிறது. தற்போது, ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. அதை விசாரிக்க முதல்வர் குழு ஒன்றை அமைத்தார். அந்த விசாரணை அறிக்கை என்னவானது? உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரந்தரமாக பதிவாளரை நியமிக்க தெரிவு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி நல்லதம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அருள்: சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எம்எல்ஏவை கூட நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டனர்.

அமைச்சர் பொன்முடி: பல்கலைக்கழகத்தின் வேந்தராக கவர்னர் தான் இருக்கிறார். பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு மாநிலத்துக்குதான் உரிமை வேண்டும், கவர்னர் குறுக்கீடு செய்யக்கூடாது என்று முதல்வர் முயற்சி செய்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: