விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகரம் முழுவதும் 10 போக்குவரத்து கால் ெசன்டர்கள் திறப்பு; அபராத தொகை செலுத்தாதவர்களிடம் நீதிமன்றம் மூலம் வசூல்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில் பணம் இல்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இ-சலான் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கடந்த 10.5.2018ல் அப்போதைய போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த அருண் நடைமுறைப்படுத்தினார். இதனால். இ-சலான் முறையால் விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங், பேடி எம், தபால் அலுவலகங்கள், இ-சென்டர்கள் மற்றும் நீதிமன்றகங்ளில் தங்களது அபராத தொகையை கட்டி வந்தனர்.

அந்த வகையில், திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 91.7 விழுக்காடு அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசார் விதிக்கும் இ-சலான்படி சரியாக அபராத தொகையை கட்டாமல் இருக்கும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அதேநேரம், தற்போது அதி நவீன சிசிடிவி கேமரா மூலம் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின்படி அவர்களிடம் அபராத தொகை வசூலிக்க ஏதுவாகவும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு உரிய நிலுவையில் உள்ள இ-சலான் குறித்த தகவல்கள் பெறுவதற்கு ஏதுவாக சென்னை மாநகர காவல் எல்லையில் 10 இடங்களில் போக்குவரத்து ‘கால் சென்டர்’ தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விவரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போனுக்கு வழக்குகள் குறித்து குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கு அனுப்பப்படும்.  தங்களது சந்தேகங்களை பொதுமக்கள் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் மற்றும் இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வேப்பேரியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி ஷரட்கர் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது: சென்ைனயில் அண்ணாநகர் ரவுண்டா உள்ளிட்ட 12 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு லட்சம் இ-சலான்கள் கொடுக்க வாய்ப்புள்ளது.

தற்போது திறக்கப்பட்டுள்ள போக்குவரத்து கால் ெசன்டர் மூலம் ஒரு வாகன ஓட்டி 5 முறைக்கு மேல் போக்குவரத்து வீதிகளை மீறி இருந்தால் அவர்களை  நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்து அபராதம் தொகை கட்ட வலியுறுத்தப்படுவார்கள்.

மாநகர காவல் எல்லையில் மாம்பலம், அடையாறு, கீழ்ப்பாக்கம், மெரினா உட்பட 10 போக்குவரத்து காவல் நிலையத்தில் இந்த கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இ-சலான் மூலம் அபராத தொகை கட்டாதவர்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது போக்குவரத்து விதிகளை மீறியதாக 5 லட்சத்திற்கும் மேலான வாகன ஓட்டிகள் அபராதம் கட்டாமல் சலான்கள் நிலுவையில் உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கால் சென்டர் மூலம் அபராத தொகை செலுத்தாதவர்களை அழைத்து நினைவூட்டுவோம். அபராதம் செலுத்த அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் பேசினார்.

பைக்ரேசில் ஈடுபட்ட 41 பேர் மீது வழக்கு: பைக் ரேசில் ஈடுபட்ட 41 பேர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 12 விழுக்காடு சிசிடிவு கேமராக்கள் பழுதடைந்துள்ளது. அவற்றின் பராமரிப்பு குறித்து அரசிடம் பேசியுள்ளோம். விரைவில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Related Stories: