தமிழகம் முழுவதும் தொடரும் ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டை.: கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் அதிரடி கைது.: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டையில் நேற்று கோவை நகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்கும் பணிகளை மேற்கொள்ள படி டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதற்க்கு ஆபரேஷன் கஞ்சா 2.0 வேட்டை என பெயர் வைக்கப்பட்டது. இந்த ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேட்டை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி வருகின்ற 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வேலூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்த 113 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 7.74 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல, நேற்று கோவை நகர் முழுவதும் போலீஸ் நடத்திய அதிரடி வேட்டையில் 13 பேர் கஞ்சாவுடன்  சிக்கியுள்ளனர்.  கைது செய்யப்பட்ட 13 பேரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: