சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போல் கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகளில் சிஎம்டிஏ: அமைச்சர் முத்துசாமி மசோதா தாக்கல் செய்தார்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பேரவையில் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியினை கருத்தில் கொண்டு, வளர்ச்சி திட்டங்களை தயாரித்தல் மற்றும் மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதனை செயற்படுத்துதலும் தேவையானதாகிறது. மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் நகர திரட்சிக்கான நகர்ப்புர வளர்ச்சிக் குழுமங்களானவை நிறுவப்பட்டுள்ளன. இந்த நகர்ப்புர வளர்ச்சிக் குழுமங்களுக்கும். பிற்காலத்தில் நிறுவப்படலாகும் நகர்ப்புர வளர்ச்சிக் குழுமங்களுக்கும் சட்டப்பூர்வமான தகுதிநிலையினை வழங்குதல் தேவையானதாகிறது. எனவே, 1971ம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தினை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: