22 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு

டெல்லி: 22 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் இருந்து இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதாக செயல்படும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு தொடர்ந்து முடக்கி வருகிறது. இதுவரை 77 யூடியூப் சேனல்கள், இனையதளம் மற்றும் டிவிட்டர் கணக்குகள் என பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது புதிதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் விவகாரம், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து தவறான போலியான செய்திகளை சுமார் 22 யூடியூப் சேனல்கள் பரப்பி வந்ததாகவும், அந்த 22 யூடியூப் செயல்களையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் இருந்து செயல்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானை சேர்ந்தவையாகும். 3 டிவிட்டர் கணக்குகள் ஒரு பேஸ்புக் கணக்கு, மற்றும் ஒரு இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: