ஒன்றிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டு ஆகலாம்: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஒன்றிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டு ஆகலாம் என ஒன்றிய அரசு தெரிவித்தது. நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று ஒன்றிய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சட்டத்தை கொண்டுவந்தது.

இந்த சட்டம் இன்று வரை முழுமை பெறாத நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு அணைகள் மற்றும் தண்ணீர் பகிர்வு தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில் அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டு ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அணை மேற்பார்வை குழுவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: