மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி திருவிழா

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி திருவிழா நடந்தது. இதில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு மங்கள இசையுடன் சிறப்பு அபிஷேகம்  மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு பச்சடியுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, காலை 10.50 மணிக்கு சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை ஆந்திரா, தெலங்கானா மாநில பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர்.  அங்கிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு வணங்கினர்.

பின்னர்,  மக்கள் நலப்பணியாக தையல் இயந்திரங்கள் 52, லேப்டாப் 8, மாவு அரைக்கும் இயந்திரங்கள் 4, விசை மருந்து தெளிப்பான்கள் 15, எலக்ட்ரானிக்ஸ் பழுது நீக்கும் கருவிகள் 15, கட்டுமானப்பணி கற்களை வெட்டும் கருவிகள் 10, அன்னதானம் வழங்க பாத்திரங்கள் 10, கல்வி உதவித்தொகை 20 மாணவர்களுக்கு உள்பட பல்ேவறு நடத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், 10,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதையடுத்து,  மதியம் 3 மணிக்கு உலக மக்கள் நன்மை வேண்டி ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்கள்  தங்க ரதம் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், துணைத் தலைவர்  தேவி ரமேஷ் மேற்பார்வையில் ஆந்திரா, தெலங்கானா மாநில பொறுப்பாளர்கள்  செய்தனர்.

Related Stories: