சிரஞ்சீவி படத்தில் ராம்சரண் காட்சிகள் குறைப்பா?

ஐதராபாத்: தெலுங்கில் கொரட்டால சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம், ஆச்சார்யா. அவரது ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஒரு பாடல் காட்சியில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரெஜினா நடனம் ஆடியுள்ளார். திடீரென்று இப்படத்தில் ராம் சரண் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து படக்குழு தரப்பில் கசிந்த செய்தியில், கவுரவ வேடத்தில் ராம் சரண் நடித்துள்ளார் என்றாலும், படம் முழுவதும் அவர் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிரஞ்சீவியும், ராம் சரணும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் சுமார் 25 நிமிடங்களாவது இருக்கும் என்று கூறப்பட்டது.

Related Stories: