சூரிய காந்த புயல் நேற்று மட்டும் பூமியை 8 முறை தாக்கியது: கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தகவல்

கொடைக்கானல்: சூரிய காந்த புயல் நேற்று மட்டும் பூமியை 8 முறை தாக்கியதை கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகவும் சக்திவாயிந்த காந்த புயல் பூமியின் வளிமண்டலத்தை தக்க கூடும் என்று ஏற்கனவே நாசா எச்சரிக்கை விடுத்திருந்தத்து.

 இதன் தாக்கம் குறித்து கொடைக்கானலில் உள்ள ஒன்றிய அரசின் வான் இயற்பியல் ஆராச்சி மையம் 5 தோலை நோக்கிகள் மூலம் கண்காணித்து  வந்தது. இதன் மூலம் இந்த காந்த புயல் நேற்று மட்டும் பூமியை 8 முறை தாக்கியது தெரியவந்துள்ளது. தாக்குதல் தீவிரமாகும் பட்சத்தில் செல்போன், செயற்கைகோள், GPS என தொலைத்தொடர்பு சேவையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதலாக 4 தொலைநோக்கிகளை கொண்டு தொடர்ந்து வானியல் மாற்றங்களை கண்காணித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய கந்த புயல் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் கடந்த 2003-ம் ஆண்டு இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: