திமுக - மதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி: சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: பொதுக்குழு தீர்மானம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். திமுக முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள்தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே 2 முறை வாய்ப்பு வழங்கி வெற்றி பெறாததால் தற்போது வாய்ப்பு வழங்கவில்லை. கட்சிக்கு எதிராக பேசியவர்கள், அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தெரிவித்தவர்கள். திமுகவுடன் தேர்தலை சந்தித்து, பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சியின் கூட்டங்களில் பங்கேற்காமல், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்கம் செய்யாமல், விட்டு வைத்திருந்தேன். திமுக கூட்டணியில் முழு புரிதலோடு செயல்பட்டு வருகிறோம்.

நான் யாரையும் இழக்க விரும்பவில்லை; இதுவரை யாரையும் துன்பப்படுத்தியது கிடையாது. திமுகவுடன் நல்ல புரிதலில் இணக்கமாக உள்ள நிலையில், சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர். கட்சி நிர்வாகிகளிடம் பேசியே இதுவரை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன் இவ்வாறு கூறினார்.

Related Stories: