முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்; ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு.!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் விசாரணை நடத்தியது. இன்று ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் தரப்பில் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.

இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. உணவு இடைவெளிக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ்-இடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானது எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: