போடி, வருசநாட்டில் காட்டெருமை தாக்கி 3 பேர் படுகாயம்

போடி : போடி அருகே, காட்டெருமை தாக்கியதில் தம்பதி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.போடியில் உள்ள முதல்வர் காலனியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு சொந்தமான காப்பித் தோட்டம் போடி வடக்கு மலைப்பகுதியில் உள்ளது.நேற்று காலை தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பெரியாற்று கோம்பை வனப்பகுதியிலிருந்து திடீரென வந்த ஒரு காட்டெருமை, கணவன், மனைவி இருவரையும் முட்டி தள்ளியது.

இவர்கள் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காட்டெருமையை விரட்டினர். இதில், தம்பதி இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு 108 மூலம் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தன்ர. அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போடி வனத்துறை, குரங்கணி போலீசார் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

வருசநாடு: கடமலைக்குண்டு அருகே, பொம்மராஜபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் (60). இவர்,தனது ஏலக்காய் தோட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்று வரும்போது காட்டெருமை தாக்கியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தேனி அரசு மருத்துவல்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, வனத்துறை அதிகாரிகள் மலைக்கிராம பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து மலைக் கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட காசிராஜனுக்கு மருத்துவச் செலவும் மற்றும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: