ஆழியார் அருகே சிறுத்தை நடமாட்டம் வெளியே நடமாட கிராம மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை

ஆனைமலை:  ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம், ஆழியார் ஓட்டை கரடு என்ற பகுதியில், கடந்த 8ஆம் தேதி சிறுத்தை தாக்கியதில் 8 ஆடுகள் பலியானது. இதையடுத்து, வனத்துறை சார்பில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளது கேமராக்களில் பதிவானது. இதையடுத்து, நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் 2 கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் உள்ள ஓட்டை கரடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராமத்தை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள், மாலை 5 மணிக்கு மேல் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு, வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: