வேதாரண்யத்தில் பஸ் படிக்கட்டில் அபாய பயணம்-கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா தகடூரில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் பள்ளி நேரங்களில் தகட்டூர் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்வேதாரண்யம் தாலுகா தகடூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு துளசியாபட்டினம், அண்ணாபேட்டை, மருதூர், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், திருத்துறைபூண்டி, கட்டிமேடு, இடும்பவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தினசரி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்களில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் வேதாரணியம், திருத்துறைப்பூண்டி இடையே இயக்கப்படும் பஸ்களிலும் வேதாரண்யம்-முத்துப்பேட்டை இடையே இயக்கப்படும் பஸ்களிலும் தகடூரில் உள்ள பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நேரத்தில் குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் செல்கின்றனர். எனவே பள்ளி நேரமான காலையிலும் மாலையிலும் தகட்டூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: