ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா 63 நாயன்மார்கள் வீதி உலா கோலாகலம்

காஞ்சிபுரம்: உலகப் பிரசித்தி பெற்ற  ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு  பங்குனி உத்திர பெருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு  ஏகாம்பரநாதர்- ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி சூரியபிரபை,  சிம்மவாகனம் சந்திரபிரபை, பூதவாகனம், நாக வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை,வெள்ளி இடப வாகனம், கைலாச பீட ராவண வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் அலங்கரித்த தேர் பவனியில் வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏகாம்பரநாதரை தரிசித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று  13ம் தேதி 63 நாயன்மார்களும் திருக்கோலத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இதில் ஏராளமானோர்  கலந்துகொண்டு நாயன்மார்களை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்,  விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: