வாஷிங்டன் ; அமெரிக்க தலைமையிலான மேற்குலகுடன் மட்டுமின்றி அவற்றை மையமாக கொண்ட தொழில்நுட்ப உலகின் பெரு நிறுவனங்கள் உடனும் ரஷ்யாவின் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடலாம் என்ற இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தின் அறிவிப்பு ரஷ்ய அரசை ஆத்திரமூட்டி உள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ள அந்நாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அதன் செயல்பாட்டை 48 மணி நேரத்தில் முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.