சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிந்தது: 4,194 புதிய பாதிப்பு 255 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி விவரங்கள் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* நேற்று ஒரே நாளில் புதிதாக 4,194 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,84,261 ஆக உள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 255 பேர் பலியானதால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,15,714 ஆக உயர்ந்துள்ளது.

* கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42,219 ஆக குறைந்துள்ளது.

* தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.58 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 0.55 சதவீதமாகவும் இருக்கிறது.

* இதுவரை 179.72 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

90 லட்சம் பேர் வசிக்கும் நகரத்தில் சீனா ஊரடங்கு: சீனாவின் வடகிழக்கில் 90 லட்சம் பேர் வசிக்கும் சாங்சுன் நகரில் கொரோனா அதி தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து, நேற்று முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுப் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கவும், 3 அடுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சீனாவில் நேற்று மட்டும் புதிதாக 397 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், 98 பேர் சாங்சுன் நகரை அடுத்த ஜிலின் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இது தவிர, ஜிலின் நகரை சேர்ந்த 93 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.

Related Stories: