பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி... உ.பி., மணிப்பூர், உத்தரகாண்ட், கோவாவில் பாஜக தொடர்ந்து முன்னிலை!!

லக்னோ : உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

உத்தர பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல்

உத்தர பிரதேசம் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவைப்படுகிறது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 61.04% வாக்குகள் பதிவாகின.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பாஜக : 255

எஸ்பி+: 100

பிஎஸ்பி: 06

காங்கிரஸ் : 06

பிற : 05

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் :

 பஞ்சாப் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவைப்படுகிறது.

ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 71.95% வாக்குகள் பதிவாகின.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஆம் ஆத்மி: 88

காங்கிரஸ் : 13

பாஜக+: 08

அகாலிதளம்+;05

பிற : 03

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள் தேவைப்படுகிறது.  ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவாங்கி உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் : 21

பாஜக : 43

ஆம் ஆத்மி : 1

பிற : 5

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல்

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள் தேவைப்படுகிறது. இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மணிப்பூரில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பாஜக : 24

காங்கிரஸ்+:12

என்பிபி: 11

பிற :13  

கோவா சட்டப்பேரவை தேர்தல் :

கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள் தேவை.

ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 79.61% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கோவாவில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ்+13

பாஜக : 18

திரிணாமுல்+:05

ஆம்ஆத்மீ : 01

பிற : 01

Related Stories: