இந்தோனேசியா, செசல்ஸ் தீவில் குமரி மீனவர்கள் உள்பட 41 பேர் கைது

நித்திரவிளை: தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 41  மீனவர்களை இந்தோனேசியா, செசல்ஸ் தீவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த  மரிய ஜெசின்தாஸ்(34) உள்ளிட்ட 8 மீனவர்கள் அந்தமான் தீவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து  வந்தனர். கடந்த 8ம் தேதி   இந்தோனேசிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்நாட்டின் வான் மற்றும் கடல் பாதுகாப்பு படையினர் விசைப்படகை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தது தெரியவந்தது. இதையடுத்து படகில் இருந்த   69,700 கிலோ மீன்களை கைப்பற்றினர். 8 பேரையும் கைது செய்து ஜி.பி.எஸ். கருவி மற்றும் ஒரு சேட்டிலைட் போனையும், படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இதே போல கொச்சியில் இருந்து செசல்ஸ் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பூத்துறை பகுதியை சேர்ந்த கோக்ளின், தூத்தூர் பகுதியை சேர்ந்த 3 விசைப்படகுகளையும், அதில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 20 பேர், கேரளாவை சேர்ந்த 13 பேர் என 33 மீனவர்களையும் செசல்ஸ் தீவு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Related Stories: