தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைமை அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்; அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

சென்னை: கண் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று (07.03.2022) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும்  இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்காக இந்த கண் பரிசோதனை முகாம் இன்று (07.03.2022) முதல் வரும் 09.03.2022 வரை தொடர்ந்து நடைபெறும்.   கண் பரிசோதனை முகாமினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, இம்முகாமில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், 24 மணி நேரம் செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையமான  மின்னகத்தினை ஆய்வு செய்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இச்சேவை மையம் 20.06.2021 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

20.06.2021 அன்று முதல் இதுநாள் வரை (07.03.2022) 6,69,724 புகார்கள் மின் நுகர்வோர்களிடமிருந்து  பெறப்பட்டு, 6,65,790 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.   99.41 % மின் நுகர்வோர்களின்   குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, திரு.பி.கே.இரவி, இ.கா.ப, காவல் துறை இயக்குநர் தமிழ்நாடு தொடர் மின் அமைப்புக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எஸ். சண்முகம், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிராந்திய தலைவர் டாக்டர் எஸ். சௌந்தரி மற்றும் இயக்குநர்கள்,  உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: