உச்ச நீதிமன்றத்திலுள்ள மேகதாது வழக்கை துரிதப்படுத்த வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: கர்நாடக அரசு, தற்போது நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு, மேகதாது அணையைக் கட்டி முடிக்க கர்நாடக அரசு துணிந்ததற்கு ஒன்றிய பாஜ அரசின் நயவஞ்சகப் போக்குதான் காரணம் ஆகும். ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்கவோ, முடிவு எடுக்கவோ அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. இந்தநிலையில் ஒன்றிய பா.ஜ அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதால், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தற்போது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒன்றிய பா.ஜ அரசு இதில் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.

Related Stories: