விசாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கல்லூரி மாணவர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

மாமல்லபுரம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சம்பத் (20). அதே பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிஏ படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி, தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். அவர், 25 நாட்களில் 1500 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் செய்கிறார்.

இந்நிலையில் சென்னை வந்த மாணவர் சம்பத், கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று மாமல்லபுரம் வந்தார். அங்கு புராதன சின்னமான அர்ச்சுணன் தபசு அருகே உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள், மாணவரின் விழிப்புணர்வு பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பினர். மாமல்லபுரத்தில் ஒருசில இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பத், பின்னர் கன்னியாகுமரி நோக்கி சென்றார், மார்ச் 15ம் தேதி அவரது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

    

Related Stories: