கெமிக்கல் இன்ஜினியர் தாம்பரம் மேயர் ஆகிறார்

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு வசந்தகுமாரி கமலகண்ணனை (25) திமுக அறிவித்துள்ளது. 32வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பி.டெக் கெமிக்கல் இன்ஜினியர். தாம்பரம் பழைய 1வது வார்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது தந்தை கமலக்கண்ணன் தாம்பரம் பழைய 1வது வட்ட செயலாளர், இவர் 35 ஆண்டுகளாக திமுகவில் உள்ளார். வசந்தகுமாரியின் கணவர் கோகுல் செல்வன் லேப் டெக்னீஷியனாக ஆக உள்ளார். துணை மேயராக திமுக தலைமை ஜெகத்ரட்சகன் எம்.பியின் மைத்துனர் ஜி.காமராஜ் (60) அறிவிக்கப்பட்டுள்ளார். காமராஜ், கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2001- 2006ம் ஆண்டு வரை, திருநீர்மலை பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலராக பணியாற்றியவர். இவரது மனைவி கலைவாணி, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் 2011 - 2016ம் ஆண்டு வரை திருநீர்மலை பேரூராட்சி தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: