நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அப்ேபாலோ டாக்டர்கள் 10 பேருக்கு சம்மன்

சென்னை:  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அப்ேபாலோ டாக்டர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 7, 8 தேதிகளில் மீண்டும் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையின் போது எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.

 உச்ச நீதிமன்ற் உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவர்கள் குழுவை அமைத்து எய்ம்ஸ் உத்தரவிட்டிருந்தது.

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,  அப்போலோ டாக்டர்கள் 13 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதை கவனமுடன் பரிசீலித்த நீதிபதி ஆறுமுகசாமி, அப்போலோ டாக்டர்கள் விஜய் சந்திர ரெட்டி, தர், சத்தியபாமா, கிரிநாத், மீரா, புவனேஸ்வரி, பாபு மனோகர், சாய் சதீஷ், கார்த்திகேயன் உட்பட  10 பேரை ஆஜராக சம்மன் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. வரும் 7ம் தேதி 5 பேரிடமும், 8ம் தேதி 5 பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையில், எய்ம்ஸ் மருத்துவ குழுவில் இடம்பெற்றுளளோர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொள்கின்றனர்.

10 டாக்டர்களை விசாரணை செய்த பிறகு, அடுத்ததாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் குழுவை அழைத்து விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இறுதியாக விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: