கிறிஸ்ட்சர்ச்:தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்டில் ஆடுகிறது.முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 276 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல்அவுட்ஆனது.பின்னர் முதல் இன்னிங்சைதொடங்கிய நியூசிலாந்து 293 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காலின் டி கிராண்ட்கோம் நாட்அவுட்டாக 120 ரன் எடுத்தார். தென்ஆப்ரிக்க தரப்பில் ரபாடா 5விக்கெட் வீழ்த்தினார்.