போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

போடி: போடியில் இருந்து தேனி சாலையில் பல்வேறு இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிநாயக்கனூர் உள்ளது. தமிழக கேரளா மாநிலங்களின் அத்தியாவசிய சாலையாகவும் இருப்பதால் தமிழக-கேரள அரசு பஸ்கள் மற்றும் கண்டெய்னர்கள், லாரிகள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தேனி, போடி ,தேவாரம், உத்தமபாளையம், போடிமெட்டு, குரங்கணி, பூப்பாறை, மூணாறு போன்ற பல பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் உட்பட பல்வேறுபட்ட வாகனங்கள் தினந்தோறும் கடக்கிறது.

போடி சாலைக்காளியம்மன் கோயில் துவங்கி பங்காரு சாமி கண்மாய், அணைக்கரைப்பட்டி விலக்கு, மீனா விலக்கு துரைராஜபுரம் காலனி, தோப்புபட்டி, தீர் த்த தொட்டி வரையில் பல இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்ச சாலையில் செல்லும் டூவீலர் ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன்கருதி இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: