ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ, தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை வழங்கியுள்ளது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

ஸ்வீடன்: ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். ஒரு சில நேட்டோ கூட்டமைப்பை சிறந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளனர்.

ஆனால் நேரடியாக ராணுவ படைகளையோ, உதவிகளையோ அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டியிருந்தது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நேட்டோவின் பொதுச்செயலாளர், தற்போதைக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இந்த சூழலில் உக்ரைனுக்கு ராணுவ சார்ந்த உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.  ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவியை செய்யும் முதல் நாடு ஸ்வீடன் என்பதாகும். முதல் நாடாகா ஸ்வீடன் அரசு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியதை தொடர்ந்து, போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறதா உக்ரைன்? என்றும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

Related Stories: