அகமதாபாத் குண்டுவெடிப்பு தீர்ப்பு: பாஜ வெளியிட்ட கார்ட்டூனை டிவிட்டர் நீக்கியதால் பரபரப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மொத்தம் 56 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் , 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக குஜராத் பாஜ பிரிவு சார்பாக டிவிட்டரில் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் தாடி வளர்த்து தலையில் தொப்பி அணிந்திருக்கும் ஒருவர் தூக்கில் தொங்குவது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது. பாஜ பதிவிட்ட இந்த கார்டூனை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. இந்த கார்ட்டூன் மூலமாக பாஜ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த நிலையில், கார்ட்டூனை நீக்கிய டிவிட்டரின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக குஜராத் பாஜ பிரிவு செய்தி தொடர்பாளர் ருத்விஜ் படேல் கூறுகையில், ‘‘எந்த குறிப்பிட்ட மதத்தையோ, சமூகத்தையோ குறி வைக்கும் நோக்கத்தோடு இந்த கார்ட்டூனை வரையவில்லை’’ என்றார்.

Related Stories: