காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் அன்னதான திட்டம், கோசாலைக்கு ₹3.50 லட்சம் நன்கொடை-விஜயவாடாவை சேர்ந்த பக்தர் வழங்கினார்

சித்தூர் : காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் அன்னதான திட்டம், கோசாலைக்கு ₹3.50 லட்சம் நன்கொடையாக விஜயவாடாவை சேர்ந்த பக்தர் கும்மடி அம்பேஸ் நேற்று வழங்கினார்.

சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

மேலும், சிலர் அன்னதான திட்டம் மற்றும் கோசாலைக்கு நன்கொடையும் வழங்கி வருகின்றனர். உண்டியல் காணிக்கை 28 நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் அன்னதான திட்டத்திற்கு ₹3 லட்சம் மற்றும் கோசாலைக்கு ₹50 ஆயிரம் என மொத்தம் ₹3.50 லட்சத்திற்கான காசோலையை விஜயவாடாவை சேர்ந்த பக்தர் கும்மடி அம்பேஸ் வழங்கினார்.

இதனை கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் பெற்று கொண்டார். பின்னர், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நினைவு பரிசாக சுவாமி புகைப்படம் வழங்கப்பட்டது.

Related Stories: