கோடியக்கரை கடற்கரையில் நாய்கள் துரத்தியதால் பயந்து கடலில் சிக்கி போராடிய மான்: வனத்துறையினர் மீட்பு

வேதாரண்யம்: கோடியக்கரை கடற்கரையில் நாய்கள் துரத்தியதற்கு பயந்து கடலில் சிக்கிய மானை வனத்துறையினர் மீட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காட்டு பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்ததால் மேய்ச்சலுக்கான மேடான பகுதிக்கு மான்கள் சில வந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் துரத்தியதால் மான்கள் திசை தெரியாமல் ஓடி கடலுக்குள் சென்று தண்ணீரில் சிக்கி கொண்டது. இதையறிந்த வனச்சரக அலுவலா் அயூப்கான், வனவர் சதிஷ் மற்றும் வனத்துறையினர் மீனவர் உதவியுடன் படகு மூலம் சென்று கடலில் தத்தளித்த மானை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மாலை காட்டுப்பகுதியில் விட்டனர்.

Related Stories: