கூலி ஆட்கள் பற்றாக்குறையால் பொக்லைன் இயந்திரம் மூலம் மரவள்ளி அறுவடை

அரூர் : கூலி ஆட்கள் பற்றாக்குறையால் மொரப்பூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மரவள்ளி செடிகளை தோண்டி, கிழங்குகளை அறுவடை செய்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளி வறட்சியை தாங்கி வளரும் பயிர் என்பதால், மானாவாரி நிலங்களில் அதிகளவில் பயிரிடுகின்றனர். வழக்கம்போல்  நடப்பாண்டும் மரவள்ளி பயரிட்டிருந்தனர். பருவமழை தொடர் மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி செடிகள் மற்றும் பிடித்திருந்த கிழங்கு அழுகிவிட்டது. மேட்டு நிலத்தில் இருந்த மரவள்ளி செடிகளிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது விவசாயிகள் மரவள்ளி அறுவடையை துவக்கி உள்ளனர். ஏற்கனவே நூறுநாள் திட்டத்தால் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. தற்போது பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு சென்றதால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மற்றும் வெயில் அடிப்பதால் மண் இறுகியது. இதனால் அறுவடை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு மரவள்ளி செடிகளை ேதாண்டி கிழங்குகளை அறுவடை செய்து வருகின்றனர்.

இதற்கு ஒரு மணி நேரத்திற்கு ₹1,100 வாடகை செலுத்த வேணடும். ஏற்கனவே சரியான விளைச்சல் இன்றி அவதிப்பட்டு வரும் நிலையில் இயந்திரம் மூலம் அறுவடையால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் மரவள்ளி பயிரிட்டதில் நடப்பாண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: