சின்னாளபட்டியில் சந்து மாரியம்மன் கும்பிடு விழா

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் முழுவதும் காலரா நோய் பரவியது. அப்போது  ஊர்மக்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். அப்போது தை, மாசி மாதம் வளர்பிறையில் தெருக்களை சுத்தப்படுத்தி, முதல் வாரம் கும்பிடு விழாவினை நடத்தி விட்டு, மறுவாரம் அழகர் தோப்பிலிருந்து அம்மன் கரகத்தை கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்தால் மக்களை காப்பாற்றுவேன் என்று அம்மன் குறி சொல்லியதாக  கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சின்னாளபட்டியை சேர்ந்த பொதுமக்கள் தை, மாசி மாதங்களில் தங்களது தெருக்களில் பெரும் விழா போல் சந்து மாரியம்மன் கும்பிடு விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நேற்று சின்னாளபட்டியிலுள்ள 25 தெருக்களில் சந்து மாரியம்மன் கும்பிடு விழா நடந்தது.

பொதுமக்கள் பிருந்தாவன தோப்பிற்கு அம்மன் கரகம் அலங்கரிக்க ஊர்வலமாக சென்றனர். அங்கு சென்றவுடன் முளைப்பாரியை வைத்து அம்மன் அருள்வேண்டி கும்மியடித்தனர். பின்னர் ஒவ்வொரு தெரு மக்களும் தனித்தனியாக அம்மன் கரகத்தை மல்லிகைப்பூ உட்பட பல்வேறு பூக்களை வைத்து அலங்கரித்தனர். தொடர்ந்து அம்மன் கரகம், முளைப்பாரியுடன் அழகர் கோயிலை 3 முறை வலம் வந்து சுவாமியை கும்பிட்டு விட்ட பின், அம்மன் கரகத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். விழா ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: